Close Menu
    What's Hot

    தனியார் கைக்கு செல்கிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்னது என்ன? மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»குண்டர்கள் கற்கள், செருப்புகளை வீசினர்; நான் நிரபராதி – முன்ஜாமின் மனுவில் புஸ்ஸி ஆனந்த் தகவல்
    Uncategorized

    குண்டர்கள் கற்கள், செருப்புகளை வீசினர்; நான் நிரபராதி – முன்ஜாமின் மனுவில் புஸ்ஸி ஆனந்த் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bussy Aanad Petition
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும் தான் ஒரு நிரபராதி எனவும் புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக கடந்த சனிக்கிழமை (செப். 27) அன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையில், மாவட்டச் செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர்.

    புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ற முறையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி பெற்ற நேரத்தில் பிரச்சாரத்தை தொடங்கவுமில்லை, முடிக்கவுமில்லை என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோர உள்ளனர். இந்த மனுக்களை இருவர் தரப்பிலும், அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தானும் கட்சியினர் மட்டுமே தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    தவிர, கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும், கூட்டத்தின் நடுவில் ஆம்புலன்ஸ் தேவையில்லாமல் வரவழைக்கப்பட்டது என்றும் எதிர்பாராமல் அதிகம் கூட்டம் வந்தது நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீசார் பணியை முறையாக செய்யவில்லை என்றும் தான் நிரபராதி என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுநாளும் நீதிமன்றம் விடுமுறை என்பதால் இந்த மனுக்கல் வெள்ளிக்கிழமை விசாரணை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    anticipatory bail Bussy Anand Campaign CTR Nirmalkumar death Karur Rally TVK Vijay ஆர். நிர்மல்குமார் உயிரிழப்பு கரூர் சி.டி தவெக பிரசாரம் புஸ்ஸி ஆனந்த் பொதுக்கூட்டம் முன் ஜாமின் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் விபத்து குறித்து வதந்தி… தவெக, பாஜக நிர்வாகிகள் 3 பேருக்கு 15 நாட்கள் சிறை…
    Next Article கரூர் சென்றது எதற்காக?… 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    August 1, 2026

    சுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தனியார் கைக்கு செல்கிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்னது என்ன? மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.