Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»வாக்காளர் குளறுபடி; 22.7 லட்சம் தலித், முஸ்லிம் பெயர்கள் நீக்கம் – செல்வப்பெருந்தகை கண்டனம்
    அரசியல்

    வாக்காளர் குளறுபடி; 22.7 லட்சம் தலித், முஸ்லிம் பெயர்கள் நீக்கம் – செல்வப்பெருந்தகை கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 5, 2025Updated:October 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள, சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகார் வாக்காளர் பட்டியல் பெரும் சர்ச்சையை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சமீபத்திய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் போது, மொத்தம் 22.7 லட்சம் தலித் மற்றும் முஸ்லிம் பெண்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெரிய ஜனநாயக அவலமாகும். இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறிக்கும் பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.

    தன்னிச்சையாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையமே ஒன்றிய பாஜக அரசின் அரசியல் விளிம்பில் சிக்கி, “SIR” என்ற குறியீட்டின் பெயரில் வாக்காளர்களை சமூக அடிப்படையில் பிரித்து நீக்கியிருப்பது, அரசியல் நயவஞ்சகத்திற்கும் அரசியலமைப்பை அவமதிப்பதற்கும் உச்சமான சான்று ஆகும்.

    தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆகியோரின் வாக்குரிமையை மறுக்கும் இந்த செயல், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்ற இந்திய அரசியலமைப்பின் மூலத்தத்துவங்களுக்கு நேரான துரோகமாகும்.

    ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல், “இந்தியா மக்களின் குரலில் உயிர்பெற்றது; அதிகாரத்தின் குரலில் அல்ல.” அந்த மக்களின் குரலையே இவ்வாறு மௌனப்படுத்தும் முயற்சி, ஜனநாயகத்தை அழித்து, அதிகாரத்தை அடிமைப்படுத்தும் பாசிச முயற்சியாகும்.

    இந்திய தேர்தல் ஆணையம் இச்சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளித்து, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் மீட்டமைக்க வேண்டும். அதோடு, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ஜனநாயக விரோத செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறது.‌ வாக்குரிமை என்பது குடிமக்களின் உயிர்நாடி; அதை வெட்டி ஆட்சி நடத்த முடியாது. மக்கள் தான் இறுதி அதிகாரம். மக்கள் தான் ஜனநாயகம். மக்கள் தான் இந்தியா.

    இந்தியாவை பாகுபாடு அல்ல, அன்பு காக்கும்.
    அதிகாரம் அல்ல, உண்மை நிலைக்கும்.
    அராஜகம் அல்ல, ஜனநாயகம் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

    bihar Dalit Muslim Women Names Removal selvaperunthagai Voter List Revision செல்வப்பெருந்தகை தலித் பீகார் பெயர்கள் நீக்கம் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் பட்டியல் திருத்தம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! – ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
    Next Article பிக்பாஸ் சீசன் – 9 ; சினிமாவும், சினிமா சார்ந்தும்..
    Editor TN Talks

    Related Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.