Close Menu
    What's Hot

    மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தலைமுடி ஏற்றுமதியில் சட்ட விரோத பணப்பரிமாற்றம்: 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
    தமிழ்நாடு

    தலைமுடி ஏற்றுமதியில் சட்ட விரோத பணப்பரிமாற்றம்: 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ed raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்​தில் பல்வேறு வழி​பாட்​டுத் தலங்​களில் வேண்​டு​தல்​களை நிறைவேற்ற பக்​தர்​கள் தங்​களது தலை​முடியை காணிக்​கை​யாக செலுத்​து​வது வழக்கம். இந்த தலை​முடியை மொத்​த​மாக பெறு​வதோடு, வேறு வழிகளி​லும் தலை​முடியை பெற்று சில தொழில் அதிபர்​கள், அவர்​களது நிறு​வனம் மூலம் வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​கின்​றனர். இதன் மூலம் அவர்​களுக்கு அதிக வரு​மானம் கிடைக்​கிறது.

    இந்த தலை​முடி உலகள​வில்விக், ஹேர் எக்​ஸ்​டென்​ஷன் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான சிகை அலங்​காரங்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. சிகை அலங்​காரங்​கள் தயாரிக்க வெளி​நாட்டு நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் மனித தலை​முடி பெரும்​பாலும் இந்​தி​யா​விலிருந்து செல்​வ​தாக கூறப்​படு​கிறது.

    இது ஒரு​புறம் இருக்க, அதிக வரு​மானம் கிடைப்​ப​தால் தலை​முடி இந்​தி​யா​விலிருந்து சட்ட விரோத​மாக கன்​டெய்​னர் லாரி​களில் எடுத்​துச் செல்​லப்​பட்டு மியான்​மர், வங்​கதேசம் மற்​றும் நேபாளம் வழி​யாக சீனா​வுக்கு கடத்​தப்​பட்​டு, அங்​குள்ள நிறு​வனங்​கள் இந்த முடியை பயன்​படுத்தி விக் தயாரித்து தங்​களது பிராண்​டு​களின் பெயரில் அவற்றை விற்​பனை செய்து பெரும் லாபம் ஈட்​டு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

    அசாம் தலைநகர் குவஹாட்​டியை மைய​மாகக் கொண்டு இந்த சட்​ட​விரோத செயல்​கள் நடப்​பதை அறிந்த அம்​மாநில அமலாக்​கத் துறை அதி​காரி​கள் இதுகுறித்து தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர். விசா​ரணை​யில் தலை​முடி மூலம் கோடிக்​கணக்​கில் சட்​ட​விரோத பணப் பரி​மாற்​றம் நடந்​திருப்​பதும், கோயில்​களில் இருந்து தலை​முடியை சேகரிக்​கும் நிறு​வனங்​கள் போலி நிறு​வனங்​களை உரு​வாக்கி கன்​டெய்​னர் லாரி​கள் மூலம் கடத்தி இந்த மோசடியை அரங்​கேற்றி இருப்​பதும் தெரிய​வந்​தது.

    அமலாக்​கத் துறை விசா​ரணை​யின் போது தலை​முடியை மொத்​த​மாக வாங்கி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரும் சென்னை கோடம்​பாக்​கத்தை சேர்ந்த வெங்​கடேசன் என்​பவருக்​கும் இந்த சட்​ட​விரோத பணப்பரி​மாற்​றத்​தில் தொடர்பு இருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யானது.

    இதைத் தொடர்ந்து சென்னை கோயம்​பேடு, நெற்​குன்​றத்​தில் விக் ஏற்​றுமதி நிறு​வனம் நடத்​திவரும் லோகேஷ்வரன் என்​பவரது குடி​யிருப்பு மற்​றும் அலு​வல​கம், அமைந்​தகரை மேத்தா நகரில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்​திவரும் முனு​சாமி வெங்​கடேசன் என்​பவரின் குடி​யிருப்​பு, கோடம்​பாக்​கம் வெள்​ளாளர் தெரு​வில் விக் ஏற்​றுமதி நிறு​வனம் நடத்​திவரும் வெங்​கடேசன் என்​பவர் வசித்து வரும் குடி​யிருப்பு, அதே பகு​தி​யில் உள்ள மற்​றொரு குடி​யிருப்​பிலும் சோதனை நடை​பெற்​றது. சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன.

    இதுகுறித்து அமலாக்​கத் துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “முழு​மை​யான சோதனைக்கு பிறகே எந்த மா​திரி​யான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்டன என்​பது குறித்து விரி​வான அறிக்கை வெளி​யிடப்​படும்​” என்​று தெரி​வித்​தனர்​.

    ed raid#hair#scam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிக் பாஷ் லீக் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்
    Next Article மாணவிகளை கால் பிடிக்கச் சொன்ன அரசு ஆசிரியை சஸ்பெண்ட்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை

    June 15, 2026

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    June 15, 2026

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்; தடுத்து நிறுத்துங்கள் – அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை

    போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை..!! கரண்ட் கட்டால் கொந்தளித்த திமுகவினர்..!!

    கொந்தளிக்கும் கும்மிடிப்பூண்டி..!! முட்புதரில் கிடந்த 3 வயது சிறுமி..!! சிக்கிய வடமாநில இளைஞன்..!!

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.