Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»அதிமுகவில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது: செங்கோட்டையன்
    தேர்தல் 2026

    அதிமுகவில் இருந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது: செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengotayan 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     “தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, “பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.என பதிலளித்தார்.

    இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் விதிகள் இருக்கிறது.” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அதிமுக எந்த மாதிரியான குடும்பக் கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, “உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்லத் தேவையில்லை.” என பதிலளித்தார். உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, “53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

    மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு, “இது அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) கேட்க வேண்டிய கேள்வி” என்றார். மேலும், மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்திருப்பது அவருடைய விருப்பம் எனவும் அவர் கூறினார்.

    அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, “கட்சியில் மகன் தலையிடுகின்றார், மைத்துனர் தலையிடுகின்றார். மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில் மருமகன் தலையீடும் இருக்கிறது. எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது ஊடகங்களுக்கு தெரியாதது கிடையாது, அதனால் அதைப் பற்றிச் சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.

    அதிமுக தரப்பிலிருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என்ற கேள்விக்கு, “யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது. பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான்” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

    admk#sengotayan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
    Next Article வாக்காளர் பட்டியலில் தவறு நடக்காமல் தடுப்பது திமுகவின் கடமை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.