Close Menu
    What's Hot

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி
    அரசியல்

    தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் போலி வாக்காளரை திமுக அரசு சேர்த்து இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது.

    இதில், வாக்குச்சாவடி கிளை அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் பேசும்போது, எஸ்ஐஆர் பணி மிகவும் முக்கியமான பணி. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு இது சரியான தருணம். அதனால் இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதிமுக வாக்களிக்கக்கூடியவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டால் அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். ஒன்றிய அளவில் வழக்கறிஞர் அணியினரை நியமிக்க வேண்டும். ஒன்றிய அளவில் எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள், முறைகேடுகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். எஸ்ஐஆர் பணியை ஆளுங்கட்சியினரே கையிலெடுத்துக்கொள்ளும் செயல்கள் எங்கேனும் நடைபெற்றால் உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும்.

    இந்த பணியில் அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளை, எஸ்ஐஆர் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்களின் பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கட்சி வளர்ச்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுங்கள். உள்ளாட்சிகள் அளவிலான மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அதிக அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துங்கள்.

    திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துச்சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    eps#admk meet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை
    Next Article நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்
    Editor TN Talks

    Related Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.