Close Menu
    What's Hot

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»காத்திருந்து காரியம் சாதித்த கதிர் ஆனந்த்! – மகனுக்கு மகுடம் சூட்டிய துரைமுருகன்
    அரசியல்

    காத்திருந்து காரியம் சாதித்த கதிர் ஆனந்த்! – மகனுக்கு மகுடம் சூட்டிய துரைமுருகன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vellore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த ஏ.பி.நந்தகுமாரின் அதிகாரத்தை பாதியாக்கி அதை அமைச்சர் துரை முருகனின் புதல்வர் கதிர் ஆனந்துக்கு கொஞ்சம் பிரித்துக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை. வேலூர் திமுகவினர் இந்தப் பாகப் பிரிவினையால் கொஞ்சம் ஷாக்காகித்தான் கிடக்கிறார்கள்.

    இது குறித்து வேலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “தலைவரிடமும் சின்னவரிடமும் நல்ல புரிதலுடன் இருந்த ஏ.பி.நந்தகுமாருக்கு பொதுச்செயலாளரின் (துரைமுருகன்) மகன் கதிர் ஆனந்துடன் ஒத்துப்போகவில்லை. தனது மகனை எப்படியும் மாவட்டச் செயலாளராக்கி விட வேண்டும் என்பது பொதுச்செயலாளரின் நெடுநாள் ஆசை. அதற்கு தடையாக இருந்தவர் ஏ.பி.நந்தகுமார்.

    இந்த நிலையில் அண்மையில் வேலூரில் உதயநிதி கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிக்கு பந்தல், சேர், லைட் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய நந்தகுமாரிடம் நிதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘நான் மட்டும் தான் செலவு செய்யணுமா… எம்.பி கிட்டயும் கேட்டு வாங்குங்க’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

    மாவட்ட வரும்படிகளை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்ளும் போது செலவு மட்டும் நான் பண்ணணுமா’? என்று அவர் ஆதங்கத்தில் சொன்னதை அப்படியே பொதுச்செயலாளருக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அதையடுத்து, தம்பி நிகழ்ச்சிக்கு நந்தகுமார் செலவு பண்ண மாட்டேங்கிறார் என்ற தகவல் தலைவர் வரைக்கும் பாஸ் ஆகிருச்சு.

    இதையடுத்து, வேலூர் மாவட்டம் அரியூரில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும் போதே நந்தகுமாரிடம் போனில் பேசிய தலைவர், மாவட்டப் பிரிவினை விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘உனக்கு 3 தொகுதியும், கதிருக்கு 2 தொகுதியும் பிரித்துக் கொடுக்கிறேன். வழக்கம் போல கட்சி பணியை தொய்வின்றி கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான நந்தகுமார், ‘சரிங்க தலைவரே’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.

    சற்று நேரத்தில், அதே மேடையில் இருந்த கதிர் ஆனந்தையும் போனில் அழைத்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் தலைவர். தனியாகப் போய் பேசிவிட்டு வந்த கதிர் ஆனந்த், உற்சாகத்துடன் திரும்பி வந்து, ‘பொறுப்புக் கொடுத்திருக்காங்க’ என தனக்குப் பக்கத்தில் இருந்த வேலூர் எம்எல்ஏ-விடம் சொல்லி இருக்கிறார்” என்றனர்.

    வேலூர் மத்திய மாவட்ட திமுக இப்போது வேலூர் வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டத்துக்கு கதிர் ஆனந்தும், தெற்கு மாவட்டத்துக்கு நந்தகுமாரும் செயலாளர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன் தக்க சமயம் பார்த்து தனது மகனை மாவட்டச் செயலாளர் பதவியில் அமர்த்தி இருப்பதை அவரது ஆதரவாளர்கள் பிறவிப் பயனாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.

    durai murugan#dmk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி
    Next Article “திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக இருக்காது!” – விஜய்க்கு அலாரம் அடிக்கும் செல்லூர் ராஜு
    Editor TN Talks

    Related Posts

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    June 14, 2026

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    June 14, 2026

    மு.க.ஸ்டாலினைப் பின்பற்றும் ஜோசப் விஜய் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ராணுவ சீருடைகள்-2026’: புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது இந்திய ராணுவம்..!!

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    அமெரிக்கா சொல்லுது.. பிரதமர் மோடி அப்படியே கேட்டு நடக்கிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.