Close Menu
    What's Hot

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய 10 நாட்களில் முடங்கிய மின்சார பஸ்கள்
    இந்தியா

    புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய 10 நாட்களில் முடங்கிய மின்சார பஸ்கள்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pdu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. மின்சார பஸ்களை கடந்த 27ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அன்றைய தினமே அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இது எனக்கூறி நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தின.

    இருப்பினும் தனியார் பங்களிப்புடன் மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த மின்சார பஸ்களுக்கு புதுவை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட மின்சார பஸ்கள் இன்று முடங்கியுள்ளன. வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை.

    அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சம்பள உயர்வு கோரி மின்சார பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேசுகையில், “தங்களுக்கு சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தாலும் பிடித்தம்போக ரூ.17 ஆயிரம் மட்டும்தான் கிடைக்கும். அதோடு தினப்படியும் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

    நிர்வாக தரப்பில் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை பலன்தரவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் மின்சார பஸ்கள் இயக்கப்படவில்லை. தொடங்கிய 10 நாட்களிலேயே மின்சார பஸ்கள் முடக்கி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    puducherry#bus#strike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    Next Article ”பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டாமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    February 25, 2026

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!

    February 25, 2026

    எளிமையின் சிகரம்!. விடைபெற்றார் கம்யூனிஸ்ட் சிங்கம்!. 100 ஆண்டு கால கொள்கை பயணம் நிறைவு!

    February 25, 2026

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.