Close Menu
    What's Hot

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்
    அரசியல்

    “தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவுக்கு, “அறிவுத் திருவிழா” என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.

    முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை.

    இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதனைகளும் – வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும், சமூகநீதி – சுயமரியாதை – மாநில சுயாட்சி – கூட்டாட்சி – ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

    எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும், அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா.

    இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் – எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது. கொள்கை ரீதியாகத் திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி
    Next Article வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள்: ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை

    February 23, 2026

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    February 22, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    Trending Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்!. 5,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பள்ளிகள் மூடல்!.

    February 24, 2026

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026

    40 கேட்ட பாஜக!. 25 தான் என கையை விரித்த இபிஎஸ்?. தாமரைக்கு நோ சொல்லும் சிறிய கட்சிகள்!.

    February 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.