Close Menu
    What's Hot

    தேர்தல் திருவிழா!. தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!.

    தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது வாக்குப்பதிவு..! முதல் ஆளாய் வாக்களித்த நடிகர் அஜித்குமார்..!

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணோம் – கடம்பூர் ராஜு அதிர்ச்சி
    அரசியல்

    கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணோம் – கடம்பூர் ராஜு அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kadambur Raju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவில்பட்டி தொகுதியில், தற்போதைய எம்எல்ஏவும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். சீர்திருத்தம் என்பது குறை நிறைகளை சரி செய்யத்தான். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் என்பதை போல் அந்த நிலை தான் திமுகவுக்கு. இவர்கள் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எஸ்ஐஆர் பணியை நிறுத்த முடியாது. தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டது கிடையாது.

    கோவில்பட்டி தொகுதியை பொருத்த வரை கடந்த 9 மாதத்துக்கு முன்பிருந்தே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கி விட்டோம். இதில், 70 சதவீதம் பேர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள். இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30 சதவீதம் பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும். அதனால் இந்த தேர்தலில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஊரில் எஸ்ஐஆர் விண்ணப்பத்தை திமுக ஒன்றிய செயலாளர் வழங்கியதை அறிந்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினோம். இனி வரும் தேர்தல்களில் எஸ்ஐஆருக்கு பின்னர் வரும் வாக்காளர் பட்டியல் தான் முக்கியம். இந்த பட்டியலில் நமக்கு ஆதரவான வாக்குகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கடமையை சரியாக செய்தால் தான் 2026 தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுட்டி மோதும் முக்கியப்புள்ளிகள்… டோஸ் விட்டு எச்சரிக்கும் தலைமை… ‘உடன்பிறப்பே வா’ ரிப்போர்ட்!!
    Next Article கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுக எஸ்ஐஆரை எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி
    Editor TN Talks

    Related Posts

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    April 22, 2026

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    April 22, 2026

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் திருவிழா!. தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!.

    தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது வாக்குப்பதிவு..! முதல் ஆளாய் வாக்களித்த நடிகர் அஜித்குமார்..!

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    Trending Posts

    தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது வாக்குப்பதிவு..! முதல் ஆளாய் வாக்களித்த நடிகர் அஜித்குமார்..!

    April 23, 2026

    தேர்தல் திருவிழா!. தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!.

    April 23, 2026

    இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.1,262 கோடி! – தலைமைத் தேர்தல் அதிகாரி

    April 22, 2026

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    April 22, 2026

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.