Close Menu
    What's Hot

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்ததில் விரைவில் தீர்வு- வெள்ளை மாளிகை
    உலகம்

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்ததில் விரைவில் தீர்வு- வெள்ளை மாளிகை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trade deal with India
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா  எண்ணை இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.

    அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக ஒப்பந்த தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்புகளால் வர்த்தக பேச்சுவார்த்தையில் சில தடைகளை சந்தித்ததாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். தாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருகட்டங்களாக நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில், முதல் கட்டத்தில் பரஸ்பர வரி குறித்த பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், முதன்முறையாக அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. இறக்குமதி செய்யும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி கார் வெடிப்பு சம்பவம்: மருத்துவர் உமர் பேசிய வீடியா வைரல்
    Next Article இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி இரங்கல்..!!

    June 25, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்த 30 இந்திய கப்பல்கள்; இயல்பு நிலைக்கு திரும்பும் போக்குவரத்து!

    June 25, 2026

    4 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை; உலக நாடுகளுக்கு நிம்மதி!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.