Close Menu
    What's Hot

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் குழி தோண்டி புதைப்பு… இபிஎஸ் கடும் தாக்கு
    அரசியல்

    திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் குழி தோண்டி புதைப்பு… இபிஎஸ் கடும் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps angry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் முழுமையாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:

    ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். 

    மு.க. ஸ்டாலின் அவர்களே- “உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

    பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்தப் பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘சரண்டர்’ ஆன காங்கிரஸ்..! குஷியில் திமுக..!! குழம்பி நிற்கும் தவெக..!!!
    Next Article +2 மாணவி கொலை – ராமநாதபுரத்தில் நடந்த கொடூரம்…இளைஞர் கைது
    Editor TN Talks

    Related Posts

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    May 31, 2026

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் ஜூன் 6 வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.