Close Menu
    What's Hot

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ
    இந்தியா

    அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2022 முதல் தலைமறைவாக இருந்த பிரபல கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.

    அன்மோல் பிஷ்னோய் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவுக்கு மாறி மாறி பயணம் செய்தது தெரியவருகிறது.

    இவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர். அன்மோல் இன்று புதுடெல்லி கொண்டுவரப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் கைது செய்யப்பட்ட 19வது நபர் அன்மோல் ஆவார்.

    அன்மோல் 2022 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் 2020 மற்றும் 2023 க்கு இடையில் தனது சகோதரர் லாரன்ஸுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், அன்மோல் அமெரிக்காவிலிருந்து பிஷ்னோய் வலையமைப்பைத் தொடர்ந்து இயக்கி வந்தார் என்றும், இந்தியாவில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை ஒருங்கிணைத்து செயல்பட்டார் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்தார் என்றும், வெளிநாட்டிலிருந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை நடத்தினார் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

    அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்: நவ.20, 21-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
    Next Article “நான் தேர்தலில் போட்டியிடாதது தவறு; எனது முயற்சி தொடரும்” – பிரசாந்த் கிஷோர்
    Editor TN Talks

    Related Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    July 6, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.