Close Menu
    What's Hot

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்: நவ.20, 21-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
    அரசியல்

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்: நவ.20, 21-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DMK MPs Meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும், 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பா? – கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் தொகையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும் வசிப்பதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்டிஏ சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு
    Next Article அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ
    Editor TN Talks

    Related Posts

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    July 6, 2026

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    July 6, 2026

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.