Close Menu
    What's Hot

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு
    Featured

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டத்திற்கான அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முந்தைய போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    மழையால் முதல் டி20 போட்டி முடிவின்றி கைவிடப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதல் ஓவரிலேயே பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரை ரன் ஏதுமின்றி வெளியேற்றி, இங்கிலாந்தை 1/2 என்ற நிலைக்கு தள்ளினார்.

    அதன்பின் கேப்டன் ஹாரி புரூக் வெறும் 12 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அதிரடியாக விளையாடினார். ஆனால் அவர் அக்சர் பட்டேலின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் ஜேக்கப் பெத்தல் மற்றும் டாம் பான்டன் இணைந்து அணியை மீட்டனர். டாம் பான்டன் 39 ரன்கள் எடுத்த நிலையில், ஜேக்கப் பெத்தல் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் இடம்பெற்றன.

    குறிப்பாக ரவி பிஷ்னோய் வீசிய ஒரு ஓவரில் 29 ரன்கள் விளாசிய பெத்தல், போட்டியின் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் இணைந்து, இன்னும் 6 பந்துகள் மீதமிருக்கும்போதே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

    சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்தியாவின் இளம் வயது சர்வதேச வீரர் மற்றும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் டி20 அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    அபிஷேக் சர்மா 43 ரன்கள், இஷான் கிஷன் 49 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்கள் எடுத்தனர். இறுதி ஓவரில் திலக் வர்மா 17 ரன்கள் சேர்த்ததால் இந்தியா 190 ரன்களை எட்டியது.

    இங்கிலாந்து தரப்பில் சாம் கரன், லியாம் டாசன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுப்படுத்தினர்.

    இந்த நிலையில் 3-வது டி 20 போட்டிக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பில் சால்ட்

    ஜோஸ் பட்லர்

    ஹாரி புரூக் (கேப்டன்)

    ஜேக்கப் பெத்தல்

    டாம் பான்டன்

    சாம் கரன்

    வில் ஜாக்ஸ்

    லியாம் டாசன்

    ஜோஃப்ரா ஆர்ச்சர்

    அடில் ரஷித்

    ஜோஷ் டங்

    இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி, நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது

    3rd T20I England Cricket Team England Playing XI IND vs ENG India vs England
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!
    Next Article வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?
    Editor TN Talks

    Related Posts

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    July 6, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.