கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோக்கா சாப்டர் ஒன் திரைப்படம் திரையிட்ட இடங்கள் எல்லாவற்றிலும் சக்கை போடு போட்டது. இந்திய துறையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு திரைப்படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. கேரளாவில் மற்றும் இந்த திரைப்படம் 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திரைப்படம் மலையாளத் திரையுலகில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது கூடுதல் சிறப்பு.
கேரளத் திரையுலகில் இன்ட்ரெஸ்ட் ஹிட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் தற்பொழுது தமிழ் திரையுலகில், புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஏழாவது திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் திரவியம் ( அறிமுகம் ) இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் எஸ் ஆர் பிரபு பங்கேற்றுக்கொண்டார்.

இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகர் வினோத் கிஷன் நடிக்க இருக்கின்றனர் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
லோக்கா திரைப்படத்திற்கு பின்னர் கல்யாணி பிரியதர்ஷன் ஜெயம் ரவியுடன் ஜீனி மற்றும் கார்த்திக் உடன் மார்ஷல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு நேரடி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், மூன்றாவதாக மற்றொரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று, பிளாக் என தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களை ( குறிப்பாக : வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட திரைப்படங்களை ) கொடுத்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிச்சயம் இம்முறையும் மற்றொரு சிறந்த கதையம்சம் கொண்ட வெற்றி திரைப்படத்தை கொடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
