ஜனநாயகயன் படத்தின் தெலுங்கு விநியோக உரிமை இவ்வளவுதானா ; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் !!
இளைய தளபதி விஜய் அரசியல் பாதையில் புதிய களம் கண்டுள்ளார். இதனால் அவர் நடித்து முடித்திருக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளியான அந்த திரைப்படத்தின் முதல் பாடல் அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டும் அடித்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தமிழக திரைப்பட விநியோக உரிமை 100 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளது. அதேபோல ஓவர்சீஸ் விநியோக உரிமை சுமார் 78 கோடி ரூபாய்க்கும், கேரளா விநியோக உரிமை சுமார் 15 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. படத்தின் ஆடியோ ரைட்ஸ் 35 கோடி ரூபாய்க்கும், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் நிறுவனம் திரைப்படத்தின் OTT ( ஓவர் தி டாப் ஒளிபரப்பு – அதாவது சாட்டிலைட் மற்றும் கேபிளில் வெளியாவதற்கு முன்பாகவே பிரத்தியேக ஒளிபரப்பு ) உரிமையை 110 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஏரியாக்களிலும் நல்ல தொகைக்கு விற்பனையாகி வரும் ஜனநாயகன் படத்தின் உரிமை ஒரு ஏரியாவில் மட்டும் குறைவாக விற்பனையாகி உள்ளது. ஆம் ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு திரைப்பட விநியோக உரிமை வெறும் 9 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது.
விஜயின் முந்தைய திரைப்படமான லியோ திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை தயாரிப்பாளர் நாகவம்சி 16 கோடி ரூபாய்க்கு பெற்றுக் கொண்டார். அந்த திரைப்படம் அவருக்கு 9 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி கொடுத்தது. ஆனால் தற்பொழுது அதே நாகவம்சி ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை வெறும் 9 கோடி ரூபாய்க்கு மட்டுமே வாங்கி இருக்கிறார்.
ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமை இவ்வளவு குறைவாக விற்பனையானதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தளபதி விஜயின் முந்தைய திரைப்படமான கோட் திரைப்படம் தான்.
அவருடைய முந்தைய திரைப்படமான கோட் திரைப்படத்தின் தெலுங்கு திரைப்பட விநியோக உரிமையை சுமார் 16-17 கோடி ரூபாய்க்கு மித்ரி மூவி மேக்கர்ஸ் கைப்பற்றியது. ஆனால் இந்த திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மிகப்பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் தெலுங்கு மொழியில் கோட் திரைப்படம் சுமார் “13 கோடி ரூபாய்” நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு மொழியில் கோட் திரைப்படம் 13 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தான், இன்று ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு திரைப்பட விநியோக உரிமை வெறும் 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்பதே நிதர்சன உண்மை.
