Close Menu
    What's Hot

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்’: பிரதமர் மோடி
    உலகம்

    ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்’: பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவை அமைக்க வேண்டும் என்று ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

    தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு இன்று (நவ. 22) தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது.

    ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

    மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், அதனை உற்சாக கண்டு ரசித்தார்.

    இதனிடையே ஜி20 உச்சி மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மாநாட்டின் முதல் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்றினார். சுகாதார அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் போது, செயல்படுவதன் முலம் நாம் வலுவாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அவசரநிலை காலங்களில் விரைவான உதவிகளை பெறும் வகையில், சக ஜி20 நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற பேரிடர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுக்களை உருவாக்குவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும் என்றார். உலகளாவிய போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, அதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘போர் நிறுத்தம் குறித்த திட்டத்தை ஏற்க வேண்டும்’: உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
    Next Article 2வது டெஸ்ட்: முதல்நாளில் தென்னாப்பிரிக்கா 247/6
    Editor TN Talks

    Related Posts

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    June 3, 2026

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    June 3, 2026

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.