Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை
    தமிழ்நாடு

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rape
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான மூவருக்கு ஆண்மை பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம் புனரியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி(30), அவரது தம்பி காளி என்ற காளீஸ்வரன்(21), உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகியோரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கடந்த 3-ம் தேதி இரவு பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.

    காலில் காயமடைந்த இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் இருந்து, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.

    கடந்த 17-ம் தேதி கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில், பாதிக்கப்பட்ட மாணவி கைது செய்யப்பட்ட மூவரையும் தனித்தனியாக அடையாளம் காட்டினார்.

    அதேபோல, அவரது ஆண் நண்பரும் அடையாளம் காட்டினார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூவரின் ரத்த மாதிரி, உயிரணு ஆகியவை சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆய்வுக்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட உடைகள், தடயங்கள் ஆகியவையும் சென்னை தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை
    Next Article எஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் – சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.