Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை
    தமிழ்நாடு

    டெல்டா, தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்​கையை ஒட்டி ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்​வுநிலை​யால் டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் (நவ.23, 24) கனமழை பெய்​யும் என்று தனியார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து அவர் கூறி​யிருப்​ப​தாவது:

    குமரிக்​கடல் கடந்து அரபிக்​கடல் சென்ற காற்​றழுத்த தாழ்வு நிலை லட்​சத்​தீவு அருகே நீடித்​துக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இலங்​கையை ஒட்​டி​யுள்ள தென்​மேற்கு வங்​கக் கடலில் புதிய கீழடுக்கு சுழற்சி கடந்த 9-ம் தேதி உரு​வானது. இது மேலும் தீவிரமடைந்து இலங்​கை​யின் தெற்​குப் பகு​தி​யையொட்டி தாழ்வு நிலை​யாக உரு​வெடுத்​தது. தற்​போது, இலங்​கைக்கு தென் மேற்கே குமரிக் கடலை​யொட்​டிய பகு​தி​யில் நிலை​கொண்​டுள்​ளது.

    இது மேலும் தீவிரமடைந்து இன்​றும், நாளை​யும் தமிழகத்​தின் பெரும்​பாலான மாவட்​டங்​களுக்​கும் பரவலான மழைப்​பொழிவை கொடுக்​கும். டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும். குறிப்​பாக, தென் மாவட்​டங்​களின் கடலோரம் மற்​றும் மேற்​குத் தொடர்ச்சி மலைப் பகு​தி​களில் மிக கனமழைக்கு வாய்ப்​புள்​ளது. மாஞ்​சோலை உள்​ளிட்ட மலைப் பள்​ளத்​தாக்கு பகு​தி​களில் அதி கனமழைக்​கும் வாய்ப்​புள்​ளது.

    இது​வரை மழை பற்​றாக்​குறை​யாக உள்ள திண்​டுக்​கல், திருப்​பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் அதிக மழை பெய்​யும். சென்னை உள்​ளிட்ட வடகடலோர மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் அவ்​வப்​போது மழை பெய்​யக்​கூடும்.

    சுமத்ரா தீவு அருகே நீடித்​து​ கொண்​டுள்ள காற்று சுழற்சி தாழ்​வுப் பகு​தி​யாக தீவிர​மாகும் என்று எதிர்​பார்த்த நிலை​யில், இன்​னும் காற்று சுழற்​சி​யாகவே நீடிக்​கிறது. இதுதாழ்​வுப் பகு​தி​யாக உரு​வாகி தீவிரமடைய சில நாட்​கள் தாமத​மாகும் என்று தெரி​கிறது.

    வரும் நாட்​களில் தெற்கு அந்​த​மான் பகு​தி​யில் காற்​றழுத்த தாழ்வு நிலை தீவிரமடை​யும் என்று எதிர்​பார்க்​கும் நிலை​யில், அதற்கு மாறாக இலங்கைகுமரிக்​கடலுக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் நிலை​கொண்​டுள்ள தாழ்வு நிலை தீவிரமடைந்​து, மன்​னார் வளை​கு​டா, இலங்கை மற்​றும் தமிழக கடலோரப் பகு​தி​களை​யொட்டி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் 29-ம் தேதி வரை அதிக மழையைத் தரும்.

    அதே நேரத்​தில், இது தீவிரத்​தாழ்​வுப் பகுதி அல்​லது தாழ்வு மண்​டலம் வரை மட்​டுமே தீவிரமடை​யும் என்​ப​தால், புயல் பாதிப்பு இருக்​காது.

    இது​போல டிசம்​பர், ஜனவரி மாதங்​களி​லும் புயல் பாதிப்பு இல்​லாமல், அனைத்து மாவட்​டங்​களிலும் அதிக மழைப்​பொழிவு இருக்​கும். மழையை எதிர்​நோக்​கி​யுள்ள விவ​சா​யிகள் நம்​பிக்​கை​யுடன் இருக்​கலாம்​.

    இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவுக்கு வாக்களிக்காத பெண்கள்! – சவுமியா அன்புமணி வேதனை
    Next Article கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.