Close Menu
    What's Hot

    ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் – சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
    தமிழ்நாடு

    எஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் – சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EC SIR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது சம்மந்தமாக இணையவழி குற்றவாளிகள் கால் செய்து ஓடிபி எண்ணை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி போலீஸார் எச்சரித்துள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத் தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி புதுச்சேரி யில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    இந்த சூழலை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம், அதற்கு உங்கள் தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்கின்றனர்.

    அவ்வாறு கேட்டால் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். ‘எங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) நேரிடையாக சென்று கொடுக்கிறோம்’ என்று கூறி விடுங்கள்.

    உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் க்ரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்புகொண்டு புகார் அளிக்கும் படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதோடு, இணைய வழி மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

    அதோடு இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தை 1930 மற்றும் 0413 – 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை
    Next Article 2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம்: அகிலேஷ் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்

    July 18, 2026

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    July 18, 2026

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    மத நல்லிணக்கத்தின் அடையாளம்… 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் பாரிஸ் மாபெரும் மசூதி!

    ரஷ்ய ஆன்லைன் வணிக நிறுவன கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.