Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    அரசியல்

    கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops admk 29 12 21 1659859274
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 54 மாதங்கள் கடந்து, ஆட்சியின் ஆயுட் காலமே முடிவுக்கு வரவுள்ள நிலையிலும், உரிய இழப்பீடு வழங்கப்படாத அவல நிலை நீடிக்கிறது. ஒருவேளை வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுதான் திராவிட மாடல் அரசு போலும்.

    வாக்குறுதியைதான் நிறைவேற்றவில்லை என்றால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதியையாவது பின்பற்றுகிறதா என்றால் அதுவும் இல்லை. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணியில் இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. அப்படி இருக்கையில், கரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை இன்னமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,கொரோனா தொற்றின்போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றினர். இவ்வாறு பணியாற்றிய மருத்துவர்களில், அரசு மருத்துவர் விவேகானந்தன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து மறைந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.

    அரசாங்கத்திடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வேலை தர உத்தரவிடுமாறு மனுத் தாக்கல் செய்தார். இவரது மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்க உத்தரவிட்டது. இருப்பினும், இதுநாள் வரை மறைந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படவில்லை.

    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காத தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.வின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

    முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி உள்பட பணியில் இருந்தபோது இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘இந்த தற்குறிகள் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்’ – விஜய் பேச்சு
    Next Article உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்கிறார் சூர்ய காந்த்
    Editor TN Talks

    Related Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    July 15, 2026

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.