Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»‘இந்த தற்குறிகள் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்’ – விஜய் பேச்சு
    அரசியல்

    ‘இந்த தற்குறிகள் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்’ – விஜய் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vjs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தனது வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அன்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். அவர் ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் இப்போது என்னெவெல்லாம் பண்ணுறாங்கன்னு உங்களுக்கே தெரியுமே.

    தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மம் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது. உங்களை, நம்மை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நாடகமாடுபவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. எனது முதல் களப்பயணம் பரந்தூரில்தான் தொடங்கியது. இப்போது ஒரு பெரிய மன வேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்புக்கு வந்துள்ளதும் இந்த காஞ்சிபுரத்துக்குத்தான்.

    எல்லா மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியத்தோடுதான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதனால்தான் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம். ஆனால், மக்களிடம் செல் எனச் சொன்ன அண்ணாவை மறந்தது யார்? கொள்கை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் கட்சியை நடத்தும் முதல்வர், நமக்கு கொள்கையில்லை என சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொல்லும் நமக்கு கொள்கையில்லையா?

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சொன்னோம். சிஏஏவை எதிர்த்தோம், வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றோம், நமக்கு கொள்கை இல்லையா? நீட் தேர்வை ஒழிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர சொன்ன நமக்கு கொள்கையில்லையா? சமத்துவம், சமவாய்ப்பு என சொல்லும் நமக்கு கொள்கையில்லையா? இவர்களின் கொள்கையே கொள்ளைதானே. இது மக்களுக்கு தெரியாதா?

    எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லை என சொன்னது யார்? இப்போது அவர்கள் கட்சியில் நடப்பது என்ன? பவளவிழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா. பாப்பா என சொன்னதையே விமர்சனம் என்றால் எப்படி. நாங்கள் இன்னும் விமர்சனம் பண்ண ஆரம்பிக்கவே இல்லை. இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் அலறினால் எப்படி? அதனால் அரசவை புலவர்களின் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.

    காஞ்சிபுரத்தின் ஜீவநதி பாலாறை சுரண்டி அழித்துவிட்டார்கள். பாலாறில் அனுமதித்த அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளையடித்துள்ளார்கள். இதன் மூலம் ரூ.4730 கோடி கொள்ளையடித்தார்கள். இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளது.

    காஞ்சியின் பெருமையான பட்டை தயாரிக்கும் கைத்தறி நெசவாளர்கள் வறுமையில் உள்ளனர். இந்த தொழிலில் கூட்டுறவு சங்கங்களில் 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ரூ.500 சம்பளம் கூட கிடைக்காமல் மழையால் கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் அவலூர் ஏரி அருகே பாலாறில் தடுப்பணை கட்ட வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.

    இதுபோல மக்கள் பிரச்சினைகளை பேசுவதால் தவெக மீது அவதூறை பரப்புகிறது திமுக. நாம ஆட்சிக்கு வந்தால்… அது என்ன வந்தால், வருவோம். மக்கள் நிச்சயமாக நம்மை ஆட்சிக்கு வரவைப்பார்கள்.

    எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதே, அதனை கூத்தாடி கட்சி என சொன்னார்கள். இப்போது நம்மையும் அப்படி சொல்கிறார்கள். மர்மயோகி படத்தில் எம்ஜிஆர், ‘குறிவைத்தால் தவறமாட்டேன். தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருப்பார். அதேபோல, ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள்.

    மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் கிடையாது. இவர்கள் தமிழக அரசியலின் ஆச்சர்ய குறி, மாற்றத்துக்கான அறிகுறி. இங்கே தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. மை டியர் அங்கிள் ஏற்கெனவே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவீட்டுக்கு ஒரு பைக் .. தவெக தேர்தல் அறிக்கை வாக்குறுதி குறித்து விஜய் பேச்சு
    Next Article கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.