Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»செனுரன் முத்​து​சாமி சதம்: குவாஹாட்டி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்!
    விளையாட்டு

    செனுரன் முத்​து​சாமி சதம்: குவாஹாட்டி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    test 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி சதம் பதிவு செய்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாக அமைந்துள்ளது.

    குவாஹாட்​டி​யில் உள்ள பர்​ச​பாரா மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கார்​பின் போஷ் நீக்​கப்​பட்டு சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான செனுரன் முத்​து​சாமி சேர்க்​கப்​பட்​டார். அவர்தான் இப்போது சதம் விளாசி அசத்தியுள்ளார்.

    காயம் காரண​மாக ஷுப்​மன் கில் வில​கிய​தால் இந்​திய அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் விளையாடி வருகிறது. இந்​திய அணி​யில் 2 மாற்​றங்​கள் இருந்​தன. ஷுப்​மன் கில், அக்​சர் படேலுக்கு பதிலாக சாய் சுதர்​சன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர்.

    முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்​பிரிக்க அணி 81.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 247 ரன்​கள் எடுத்த நிலை​யில் போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் ஆட்​டம் முடித்​துக் கொள்​ளப்​பட்​டது. செனுரன் முத்​து​சாமி 45 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும், கைல் வெர்​ரெய்ன் ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (நவ.23) தொடங்கியது. முதல் செஷனை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக அணுகினர் செனுரன் முத்​து​சாமியும், கைல் வெர்​ரெய்னும். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்தனர். அவர்களது தடுப்பாட்டம் அமர்க்களமாக இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கைல் வெர்​ரெய்ன் 122 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து வந்த மார்கோ யான்சன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் 192 பந்துகளில் சதம் விளாசினார் முத்துசாமி. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரில் 7-வது பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யான்சனும் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் மதிய உணவு நேர இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு செஷன் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே அந்த அணி இழந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
    Next Article மிரட்டும் கனமழை… நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
    Editor TN Talks

    Related Posts

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    July 23, 2026

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    July 23, 2026

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    “இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததே நீங்கள்தான்”!. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.