Close Menu
    What's Hot

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

    சூடுபிடிக்கும் ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கு.. தொடங்கியது CBCID விசாரணை..!! உருளப்போகும் தலைகள்..!!

    பிரதமர் மோடி தொகுதியில் ரூ.25,000 கோடியில் மெகா திட்டங்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஒரு தெரு நாய் கடித்தால் அதை பயமுறுத்தும் விதமாக சொல்லாதீர்கள் – நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் !!!
    இந்தியா

    ஒரு தெரு நாய் கடித்தால் அதை பயமுறுத்தும் விதமாக சொல்லாதீர்கள் – நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025Updated:November 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251124 175250
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் உள்ள தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று நேற்று சென்னையில் விழிப்புணர்வு நடந்தது. தெருநாய்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் ( Heaven for Animals ) என்ற என்ஜிஓ சார்பாக அமைதியான முறையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் நிவேதா பெத்துராஜ், “யாரையாவது ஒரு தெரு நாய் கடித்து விட்டால் அதை பயமுறுத்தும் செய்தியாக சொல்ல வேண்டாம். நீங்கள் அதை பயமுறுத்தும் விதமாக சொல்கிறீர்கள் அது தவறு. நாய் கடிப்பது சரி என்று நான் சொல்லவில்லை. நாய் கடிப்பதன் மூலமாக ராபிஸ் நோய் தொற்று பரவுவது நம் அனைவருக்கும் தெரியும்.

    செய்தியாளர்களாக நீங்கள் ஒரு நாய் யாரேனும் ஒருவரை கடித்து விட்டால் அதை பயமுறுத்தும் நோக்கத்தில் சொல்லாமல் அதற்கான தீர்வு என்ன இனி இது போல் நடக்காமல் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். முறையான தடுப்பூசியை தெரு நாய்களுக்கு செலுத்தி அவைகளை பராமரிப்பதன் மூலம் இது போன்ற நோய் தொற்று வர வாய்ப்பு இல்லை என்று சொல்லி பழகுங்கள்.

    மனிதர்களாகி நாம் யாரேனும் ஒருவர் தவறு செய்து விட்டால் அதை திருத்துவோம். தவறு செய்த அந்த நபரை நாம் கொள்வதில்லை, அந்த தவறை செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டி அந்த தவறை திருத்துவோம். அதையே விலங்குகளுக்கும் செய்ய வேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

    20251124 173940

    நிவேதா பெத்துராஜ் தெருநாய்கள் மீது இவ்வளவு அக்கறையாக பேசியது குறித்து மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தெரு நாய்கள் அனைத்தையும் சரியாக கையாண்டு அவைகளுக்கு தடுப்பூசி செலுத்தி சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டுகோள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    HOME PAGE Turquoise Box 5 Owner Animal Care 2 TOLFA staff treating a white dog 810x540 1

    Nivetha perhuraj protest Street dogs
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜாம்பவான் நடிகர் தர்மேந்திரா தியோல் 89 வயதில் காலமானார் !!!
    Next Article 27 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்து பிரியா விடைபெற்ற மான் !!!
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

    July 16, 2026

    சூடுபிடிக்கும் ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கு.. தொடங்கியது CBCID விசாரணை..!! உருளப்போகும் தலைகள்..!!

    July 16, 2026

    பிரதமர் மோடி தொகுதியில் ரூ.25,000 கோடியில் மெகா திட்டங்கள்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்ற வழக்கு – சட்டமன்ற செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு

    சூடுபிடிக்கும் ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கு.. தொடங்கியது CBCID விசாரணை..!! உருளப்போகும் தலைகள்..!!

    பிரதமர் மோடி தொகுதியில் ரூ.25,000 கோடியில் மெகா திட்டங்கள்

    திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டம் ரத்து..! அமைச்சரவையில் அதிரடி முடிவு..! 

    இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்….  புதிய வாய்ப்புகளைத் திறக்கும்-  பியூஷ் கோயல் நம்பிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.