நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

நான் பார்த்த வரையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு விஷயம் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும். சரியான விஷயங்களை மட்டும் தான் அவர் சொல்லுவார். ஏனென்றால் அவர் திரைப்படத்தின் டீசர் உருவாக்கத்தில் ஒரு விஷயத்தை சொன்னார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் அவர் பாடி வெளியான எனக்கென யாரும் இல்லையே பாடல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அந்தப் பாடல் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றால் நிச்சயமாக ஹிட் ஆகும். இந்த டீசர் அனைத்து மக்களையும் சென்றடையும் என்று பிரதீப் பிரமாதம் கணித்தார். அவர் சொன்னபடியே நடந்தது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் அவர் இருப்பார். அவரை சுற்றி எப்பொழுதும் ஒரு அழகான பாசிட்டிவான சூழ்நிலை வைத்திருப்பார்.” இவ்வாறு பிரதீப் பிரமாதன் குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள் பாராட்டி கூறியிருக்கிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி கார்த்தியுடன் இணைந்து நடித்த வா வாத்தியார் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஜெயம் ரவியுடன் ஜீனி என்கிற திரைப்படமாக அடுத்த ஆண்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடுத்தக்கது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டிராகன் மற்றும் நியூட் திரைப்படம் இரண்டும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வசூல் இறுதியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

