Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
    சினிமா

    மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mdus 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் அந்த பதிவில் இணைத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களது நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி ‘மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில், “கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேட்டரிங் முன்பதிவுகள் ரத்தாகியுள்ளன. எனவே சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும்,” என வாதிடப்பட்டது.

    கிரிசில்டா தரப்பில், “சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. சுமார் ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர்? எப்போது ரத்து செய்யப்பட்டது? எவ்வளவு முன் தொகை பெறப்பட்டது? எவ்வளவு முன்தொகை திரும்ப கொடுக்கப்பட்டது? என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் முன்பதிவுகள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என வாதிடப்பட்டது.

    தொடர்ந்து இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் துயர சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் மீண்டும் ஆஜர்
    Next Article நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    தனுஷின் ’ஓம்’!

    June 18, 2026

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.