Close Menu
    What's Hot

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
    தேர்தல் 2026

    தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து 2026 தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

    இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் களப்பணிகளில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி ஏற்கெனவே அமைத்திருந்த கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து இறங்குவதால் வலுவாக காணப்படும் நிலையில், எதிரணியில் இருக்கும் அதிமுகவுடன் பாஜக மட்டுமே கூட்டணியில் இடம்பிடித்திருக்கிறது.

    வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணியை இதுவரை அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் முயற்சிகளும் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரவும் முய்றசிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே செங்கோட்டையன், தவெகவுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்​பான சூழலில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், திடீரென நேற்று முன்​தினம் டெல்​லிக்கு புறப்​பட்டு சென்​றார். மாநில தலை​வர்​கள் அவ்​வப்​போது தேசிய தலை​வர்​களை சந்​திப்​பது வழக்​கம் தான் என்​றாலும், கூட்​ட​ணி​யில் கட்​சிகள் இடம்​பெறாத நிலை​யில் அடுத்தகட்ட நடவடிக்​கை​கள் தொடர்​பாக ஆலோ​சிப்​ப​தற்​கான நயி​னார் நாகேந்​திரனின் திடீர் டெல்லி பயணம் அரசி​யல் வட்​டாரங்​களில் பேசு பொருளானது.

    அந்​தவகை​யில் டெல்லி சென்ற நயி​னார் நாகேந்​திரன் அங்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்​டா, பாஜக மாநில தேர்​தல் ஒருங்​கிணைப்பாளர் பைஜ​யிந்த் பாண்டா உள்​ளிட்ட பாஜக தேசிய தலை​வர்​களை நேற்று சந்​தித்து பேசி​னார். இந்த சந்​திப்​பில் வரவிருக்​கும் சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக​வுக்​கான தொகுதி பங்​கீடு​கள் குறித்​தும், கூட்​ட​ணி​யில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

    அதேபோல் கூட்டணி தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தமிழகம் வரவுள்ளார். அதற்குள் கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசி, இந்த மாத இறுதிக்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க டெல்லி தலைவர்கள் முடிவு செய்யவே இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்தவகையில் அமித் ஷா தமிழகம் வரும்போது கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிச.30-ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்
    Next Article விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் ஷிகெல்லா தொற்று..!! மருத்துவமனையில் பள்ளி மாணவர்கள் அட்மிட்..!!

    பாரதிராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்!

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.