Close Menu
    What's Hot

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொட்டும் கனமழை… ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
    தமிழ்நாடு

    கொட்டும் கனமழை… ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மலாக்கா ஜலசந்தி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது. மேலும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவிவருகிறது.

    மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. அதன்படி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது மேற்கு, வடமேற்கில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் வலுப்பெறும் என்று மட்டுமே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல, தெற்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை பெய்துவருவதை அடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு முழுவதும் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தந்த பள்ளிகள் நிர்வாகம் மாணவர்களின் நலம் கருதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ!
    Next Article கிருஷ்ணரை எப்படி எளிமையாக வீட்டிலேயே முறையாக வழிபாடு செய்வது?
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    May 19, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    May 19, 2026

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.