Close Menu
    What's Hot

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்?
    தமிழ்நாடு

    இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cyclone Sitrang kills 35
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்துக்குள் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    அதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவ.24ஆம் தேதி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று (நவ.25) காலை 5.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியான நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், பிற்பகலில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைம் தெரிவித்துள்ளது.

    மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்
    Next Article தவெகவில் இணைகிறீர்களா?” – மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    May 19, 2026

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    டெல்லி அரசியலில் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை எம்.பி.-யை தேர்வு செய்ய விஜய் தீவிரம்

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    ஈரான் மீதான தாக்குதல் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைப்பு: டிரம்ப்

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.