Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘கருத்த மச்சான்’ பாடலை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? உயர் நீதிமன்றம் கேள்வி
    சினிமா

    ‘கருத்த மச்சான்’ பாடலை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? உயர் நீதிமன்றம் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ilayaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டியூட் (Dude) திரைப்படத்தில் ‘கருத்த மச்சான்’ பாடலை பயன்படுத்தியதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தீபாவளிக்கு வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில் தன்னுடைய இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போதும் கூட கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார்?” என்றும், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளித்து வாதிட்ட இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், ”இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளது. அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    அப்போது டியூட் (Dude) பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ”தொடர்ச்சியாக இளையராஜாவின் பாடல்களை பதிப்புரிமையை மீறி மற்ற படங்களில் பயன்படுத்துவது ஏன்?” என நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த டியூட் (Dude) திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்தது. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.” என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்?” என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ”ஏற்கெனவே இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அதுபோல எந்த நபரும் இல்லை என நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்… அகமதாபாத்தில் நடத்த அனுமதி
    Next Article இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருக்கு – உங்களுக்கு எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.