Close Menu
    What's Hot

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»8 மணி நேர வேலை.. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு
    சினிமா

    8 மணி நேர வேலை.. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    keerthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற இந்தி நடிகை தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு தீபகா படுகோன், படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிவேன் என்று கூறியது இணையத்தில் தகவலாக வெளியானது. இது குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    தற்போது தீபிகா படுகோன் கருத்து குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “காலை 9மணி முதல், மாலை 6 மணி வரை படப்பிடிப்பிலும், காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 2 மணி வரை படப்பிடிப்பு என இரண்டிலும் கலந்து கொண்டுள்ளேன். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராகி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று மேக்கப் போட்டு தயாராக இருக்க வேண்டும்.

    சரியான நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிந்துவிட்டால் அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து உடற்பயிற்சி செய்துவிட்டு, குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க 11 மணி ஆகிவிடும். இப்படியான சூழலில் 6-7 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும். ஒரு நடிகையாக சரியான தூக்கத்தை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல்நிலை மிகவும் முக்கியம். எனவே, குறைந்த நேர வேலை என்பதையே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நாயகியை மையப்படுத்திய படங்களுக்கான வரவேற்பு குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ், “நமது திரையுலகம் நாயகர்களை மையமாக கொண்டது என்பது தான் உண்மை. பார்வையாளர்களின் கருத்தும் முக்கியமானது.

    உங்களுக்கு பிடித்த நாயகன், நாயகி படங்கள் ஒரே நாளில் வெளியானால் பார்வையாளர்கள் நிச்சயமாக நாயகனை மையப்படுத்திய படத்தைத் தான் பார்ப்பார்கள். நாயகியை மையப்படுத்திய படம் நன்றாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள். நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு பெரியளவில் ஓப்பனிங் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனவரி 23-ம் தேதி ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ்
    Next Article காபி, டீ குடிக்க சரியான நேரம் எது?
    Editor TN Talks

    Related Posts

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!. சென்னையில் பரபரப்பு!

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    Trending Posts

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    April 14, 2026

    “பழைய திமுகவை பார்க்க வேண்டியிருக்கும்”!. பிரதமர் மோடிக்கு கடைசி வார்னிங்!. முதல்வர் ஸ்டாலின்!

    April 14, 2026

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    April 14, 2026

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    April 14, 2026

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.