Close Menu
    What's Hot

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    அணு ஆயுத நாடாக நீடிப்பதில் வடகொரியா மீண்டும் உறுதி: சர்வதேச அழுத்தங்களுக்கு மறுப்பு!

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»முதலமைச்சர் பதவியை இபிஎஸ்ஸூக்கு விட்டுக் கொடுத்தேன்.. செங்கோட்டையன் பேச்சு
    அரசியல்

    முதலமைச்சர் பதவியை இபிஎஸ்ஸூக்கு விட்டுக் கொடுத்தேன்.. செங்கோட்டையன் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025Updated:November 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ADMK Former minister Sengottaiyan ADMK Chief secretary Edappadi palanisamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்ததாக தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ், சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கூவத்தூரில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.

    இந்நிலையில், தவெகவில் சேர்ந்தபிறகு கோபிசெட்டிபாளையத்திற்கு முதல்முறையாக  செங்கோட்டையன் இன்று வந்தார். அங்கு அவருக்கு தவெகவினரும், ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது:

    தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும். அதற்காகவே தவெகவில் சேர்ந்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு இணைந்து நான் பணியாற்றியுள்ளேன். எனது அனுபவத்தை வைத்து விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்.

    என்னை பற்றி, யார் எது சொன்னாலும் பரவாயில்லை. கோபி தொகுதி மக்கள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார்கள்.

    டிசம்பர் மாதத்தில் தவெக கூட்டணி வலுவடையும். தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சியமைக்கும். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார்.

    முதலமைச்சராகும் வாய்ப்பு முன்பு எனக்கு வந்தது. ஆனால் அந்தப் பதவியை அவருக்கு (இபிஎஸ்) விட்டுக் கொடுத்தேன். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள்.

    இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதாரில் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி!
    Next Article 2026ல் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு!- பிரேமலதா விஜயகாந்த்
    Editor TN Talks

    Related Posts

    மத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

    June 14, 2026

    #BREAKING| பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா..!! ஜி.கே வாசன் அறிவிப்பு..!!

    June 14, 2026

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    அணு ஆயுத நாடாக நீடிப்பதில் வடகொரியா மீண்டும் உறுதி: சர்வதேச அழுத்தங்களுக்கு மறுப்பு!

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.