Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»இயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!. கோவையில் சிம்பிளாக நடந்த திருமணம்!.
    சினிமா

    இயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!. கோவையில் சிம்பிளாக நடந்த திருமணம்!.

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Samantha married
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் இயக்குநர் ராஜ் நிதிமோரு – நடிகை சமந்தா இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னையைச் சேர்ந்த பெண்ணான நடிகை சமந்தா, கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, தன்னுடன் நடந்த, சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்று ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

    சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இரண்டே வருடத்தில் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோரு என்பவரை அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் அவ்வபோது வெளியாகி வந்தனர். சமந்தா முதல் முதலில் நடித்த ஃபேமிலி மேன் 2 வெப்தொடரின் இயக்குனர் இவராவார்.

    இந்தநிலையில், கோவை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் இயக்குநர் ராஜ் நிதிமோரு – நடிகை சமந்தா இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமணத்தில் மொத்தம் 30 விருந்தினர்களே கலந்துகொண்டதாகவும், “சமந்தா திருமணத்திற்கு சிவப்பு நிற சேலை அணிந்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே, தனது இன்ஸ்டா பக்கத்தில் “விரக்தியடைந்தவர்கள் அவநம்பிக்கையான காரியங்களைச் செய்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இது சமந்தா – ராஜ் நிதிமோரு திருமணம் தொடர்பான ஊகங்களை வலுப்படுத்துவதாக தெரிகிறது. தகவல்களின்படி, ராஜ் நிதிமோரும் அவரது முதல் மனைவி ஷ்யாமலியை கடந்த 2022 இல் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    get married Isha Yoga Centre Raj Nidimoru Samantha
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிசம்பர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது!. முழு லிஸ்ட் இதோ!.
    Next Article ஆசியாவையே உலுக்கிய சென்யார், டிட்வா புயல்கள்!. 1,000க்கும் மேற்பட்டோர் பலி!. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த அவலம்!.
    Editor TN Talks

    Related Posts

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    July 16, 2026

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.