Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? டெல்லியில் முகாம்
    அரசியல்

    பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? டெல்லியில் முகாம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் முகாமிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். பாஜகவில் இணையக்கூடும் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    கொச்​சி​யில் இருந்து நேற்று முன்​தினம் டெல்லி சென்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாஜக​வின் முக்​கிய பொறுப்​பாளர்​கள் சிலரை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

    அதி​முக​வில் அனை​வ​ரும் இணைந்து செயல்பட வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, அதி​முக உரிமை மீட்​புக்​குழு​வைத் தொடங்கி நிர்​வாகி​களை நியமித்து வந்த முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாஜக தரப்பு ஒத்​துழைக்​காத​தா​லும், பிரதமர் நரேந்​திர மோடி தமி​ழ​கம் வந்த போது சந்​திக்க இயலாத காரணத்​தா​லும், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக கடந்த ஜூலை மாதம் அறி​வித்து வெளி​யேறி​னார்.

    தொடர்ந்​து, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து டிடிவி தினகரனும் வில​கி​னார். இந்​நிலை​யி்ல், அதி​முகவை ஒன்​றிணைக்க வலி​யுறுத்​திய முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டைய​னும் கட்​சி​யில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யால் நீக்​கப்​பட்​டார்.

    தொடர்ந்​து, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்​கோட்​டையன் ஆகி​யோர் இணைந்து செயல்​படு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், செங்​கோட்​டையன் தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்து விட்​டார். இதற்​கிடை​யில் யாரை​யும் அதி​முக​வில் இணைக்க மாட்​டோம் என்று பழனி​சாமி கூறி​விட்​ட​தால், இணைப்பு முயற்​சிகளுக்கு வலு​வில்​லாமல் போனது.

    இறு​தி​யாக, சமீபத்​தில் நிர்​வாகி​களு​டன் பேசிய ஓபிஎஸ், டிசம்​பர் 15-ம் தேதி மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்தை நடத்​தப்​போவ​தாக​வும், அதற்​குள் ஒருங்​கிணைக்க வேண்​டும், இல்​லா​விட்​டால், எங்​கள் முடிவை மக்​கள் ஏற்​கும் நிலைக்கு எங்​களை தள்​ளி​வி​டாதீர்​கள் என்று கூறி​யிருந்​தார்.

    இந்​நிலை​யில், அவர் தனது அதி​முக உரிமை மீட்​புக்​குழுவை மாற்​றி​விட்டு அதி​முக உரிமை மீட்​புக் கழக​மாக பதிவு செய்து கட்​சி​யாக நடத்​தப்​போவ​தாக தகவல் வெளி​யானது. இந்த சூழலில், நேற்று முன்​தினம் கேரள​ மாநிலம் கொச்​சிக்கு சிகிச்​சைக்​காக சென்ற ஓபிஎஸ், அங்​கிருந்து டெல்லி சென்​றுள்​ளார். டெல்​லி​யில் முகாமிட்​டுள்ள அவர், பாஜக தலை​வர்​கள் மற்​றும் தமிழக பொறுப்​பாளர்​கள் சிலரை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது.

    பாஜக தீவிர ஆதரவாளரான ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யும் டெல்லி சென்​றுள்​ள​தாக​வும், அவர் மூலம் ஓபிஎஸ் பாஜக தலை​வர்​களை சந்​திக்​கலாம்​,​ அப்போது பாஜகவில் ஓபிஎஸ் இணையக்கூடும் அல்லது பாஜக கூட்​ட​ணிக்​குள் ஓபிஎஸ் மீண்​டும் வரு​வதற்கு வாய்ப்​புள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடுமுழுவதும் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து!. மத்திய அரசு தகவல்!
    Next Article தி​முக​விடம் 40 தொகு​தி​கள் கேட்க காங்​கிரஸ் முடிவு.. இன்று முதல்கட்ட பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.