Close Menu
    What's Hot

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வெனிசூலா நாட்டின் மீது விரைவில் தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு
    உலகம்

    வெனிசூலா நாட்டின் மீது விரைவில் தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெனிசூலாவுக்குள் புகுந்து போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது விரைவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவுக்கும், இடதுசாரி அரசு அமைந்துள்ள வெனிசூலா நாட்டுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கரிபீயன் பகுதியில் அண்மையில் சென்ற படகுகள் மீது அமெரிக்க கடற்படை கப்பல்கள் தாக்குதல் நடத்தின. இதில் 80 பேர் வரை பலியாகினர்.

    அந்தப் படகுகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானவையாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வெனிசூலா அரசு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெனிசூலா நாட்டில் வாழும் தீய நபர்கள் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். ஏற்கெனவே கடற்பகுதியில் நடத்தினோம். தற்போது நிலத்திலும் தாக்குதல் நடத்தவுள்ளோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதான காரியம். ஏனெனில் அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு நன்குத் தெரியும்” என்றார்.

    வெனிசூலாவில் நிகோலஸ் மடூரோ தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சியில் உள்ளது. அமெரிக்காவின் போட்டி நாடுகளாக கருதப்படும் சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் வெனிசூலா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது. ஒருவேளை வெனிசூலாவுக்குள் புகுந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது 2 நாடுகள் இடையேயான போராக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleEMI குறையுமா?. சுமை அதிகரிக்குமா?. ரிசர்வ் வங்கியின் MPC கூட்டம் இன்று தொடங்குகிறது!.
    Next Article தங்கம் விலை மீண்டும் உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.