Close Menu
    What's Hot

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஜெயக்குமாரை சுற்றும் வதந்திகள்.. குறிவைக்கும் எதிரிகள்
    அரசியல்

    ஜெயக்குமாரை சுற்றும் வதந்திகள்.. குறிவைக்கும் எதிரிகள்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    djsssssssss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளாலும், குறிவைக்கும் அரசியல் எதிரிகளாலும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தவிப்பில் உள்ளார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக கருதப்படுபவர்  டி.ஜெயக்குமார். ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன போதிலும், அவரின் புகைப்படத்தையே தனது சட்டைப் பையிலும், வீட்டு வரவேற்பு அறையிலும் வைத்துள்ளார். முகநூல், எக்ஸ் பக்கத்திலும் ஜெயலலிதாவின் விசுவாசி என தன்னை அடையாளப்படுத்துவார்.

    அதிமுகவில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறும்போதெல்லாம், ஜெயக்குமாரும் கட்சி மாறக்கூடும் என தகவல் வெளியாவதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், இதேபோல் தகவல் பரவியது. ஆனால் இதை உடனடியாக ஜெயக்குமார் மறுத்து விட்டார்.

    ஏன் ஜெயக்குமாரை குறிவைத்து மட்டும் இதுபோல் அடுத்தடுத்து வதந்தி பரப்பப்படுகிறது என விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதுகுறித்து அவரின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:

    ஜெயக்குமார் கட்சி மாறப் போவதாக வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி. ஜெயக்குமார் அதிமுகவின் தீவிர விசுவாசி ஆவார். ஜெயலலிதா மீது தீவிர பற்றுக் கொண்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீதும் ஜெயக்குமார் தீவிர பற்று கொண்டுள்ளார்.

    எம்எல்ஏவாக இல்லாத போதிலும், தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்களிலும் தவறாமல் பங்கு பெறுவதை ஜெயக்குமார் வழக்கமாக வைத்துள்ளார். கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சென்னையில் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் ஜெயக்குமாரின் செல்வாக்கை கண்டு, அவரின் அரசியல் எதிரிகள் பொறாமையில் உள்ளனர். இதனால் பணம் கொடுத்து பொய்யையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். ஜெயக்குமாரை பற்றி தெரிந்த செய்தியாளர்கள், அவர் குறித்த வதந்தியை வெளியிடுவதில்லை.

    வெளி மாநிலங்களில் இருக்கும் சில இணையதளங்கள், செயலிகள் மட்டுமே இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றன. அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    ராயபுரம் தொகுதியில் வென்று எம்எல்ஏவான ஆளும் கட்சி பிரமுகர் மீது தொகுதி மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. பதவியில் இல்லையென்றாலும், தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளில் பம்பரமாக சுழலும் ஜெயக்குமார், வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அதை தடுக்கவே ஆளும் கட்சியும், அரசியல் எதிரிகளும் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதை நிச்சயம், மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், தனது அரசியல் வாழ்வில் எத்தனையோ சவால்களை கண்டவர். இந்த சதியையும் அவர் முறியடிப்பார் என அவரின் ஆதரவாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா ரங்க நாதனின் 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் !!!
    Next Article 2வது ஒருநாள் போட்டி: தெ.ஆப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் இலக்கு
    Editor TN Talks

    Related Posts

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.