Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»2வது ஒருநாள் போட்டி: தெ.ஆப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் இலக்கு
    விளையாட்டு

    2வது ஒருநாள் போட்டி: தெ.ஆப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் இலக்கு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    inds
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய அணி 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தெ.ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனினும் 3வது விக்கெட்டுக்கு கோலி, கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக கோலி விளையாடினார். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து சதத்தை பதிவு செய்தனர்.

    கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோலி 90 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோலியின் 53வது சதமாகும். அதேபோல், சர்வதேச அரங்கில் அவரின் 84வது சதமாகும்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 39.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை சேர்த்திருந்தது.

    இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 66 ரன்களை குவித்தார்.

    50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 359 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தெ.ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயக்குமாரை சுற்றும் வதந்திகள்.. குறிவைக்கும் எதிரிகள்
    Next Article திமுகவில் இணைந்தார் அதிமுக EX எம்எல்ஏ சின்னசாமி
    Editor TN Talks

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.