Close Menu
    What's Hot

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“கட்சி நிலைபாட்டையே மறந்துவிட்டார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி சாடல்
    அரசியல்

    “கட்சி நிலைபாட்டையே மறந்துவிட்டார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rgss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் சம்பவத்தின் மூலம் தான் முழு அடிமை என்பதை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய கட்சி நிலைப்பாட்டையே அவர் மறந்துவிட்டார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் கிடையாது. ஆனால் கார்த்திகை தீபத்தை ஒட்டி புதிய பிரச்சினையை கிளப்பும் நோக்கில் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் எந்த இடத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த இடத்திலேயேதான் தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்று 2014-ம் ஆண்டிலேயே தீர்ப்பு வந்திருக்கிறது.

    நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. 2014-ம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின் மீது எந்த மேல்முறையீடும் இல்லாமல் இன்று ஒரு தனி நீதிபதியின் தீர்ப்பை கொண்டு வந்தால் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

    2014 தீர்ப்பின் படி நாங்கள் செயல்படுகிறோம். அதை மறந்துவிட்டு பேசுபவர்கள் மீது எந்தவித வழக்கையும் தமிழ்நாடு அரசால் தொடுக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. இந்தியாவிலேயே மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் இடம் தமிழ்நாடுதான். எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது.

    தமிழக அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டு சொல்வதுதான் அவருடைய ஒரே பணி. இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆதரவாக இருக்க வேண்டியவர், இந்துத்துவ கைகூலிகளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கிறார்.

    ஜெயலலிதா இருந்தபோது இப்போது தீபம் ஏற்றும் இடத்தில்தான் ஏற்ற வேண்டும் என்று இதே அதிமுக வாதாடி இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள். திருப்பரங்குன்றம் சம்பவத்தின் மூலம் தான் முழு அடிமை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். தன்னுடைய கட்சி நிலைப்பாட்டையே மறந்துவிட்டார். அதிமுக தொண்டர்கள் வெட்கப்பட வேண்டும்”

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திருப்பரங்குன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தாமல் பதற்றம் உருவாக்குகிறது திமுக அரசு” – இபிஎஸ்
    Next Article நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
    Editor TN Talks

    Related Posts

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    Trending Posts

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.