Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஒரே மாதத்தில் 32 படங்கள் ரிலீஸ் – அசத்தும் தமிழ் சினிமா
    சினிமா

    ஒரே மாதத்தில் 32 படங்கள் ரிலீஸ் – அசத்தும் தமிழ் சினிமா

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரே மாதத்தில் 32 திரைப்படங்களை வெளியிட்டு, தமிழ் சினிமா சாதனை படைத்துள்ளது.

    கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டு 241 திரைப் படங்கள் வெளியாகி இருந்தன. இந்த எண்ணிக்கை அதிகம் என்று அப்போது கூறப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 262 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. (2024ம் ஆண்டு நவம்பர் வரை 220 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன). வருடத்தின் கடைசி மாதம் என்பதால் டிசம்பரில் 20-லிருந்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வருடம் 280-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி, சாதனைப் படைக்க இருக்கிறது.

    இதற்கிடையே நவம்பர் மாதம் மட்டும், ஆரோமலே, அதர்ஸ், கிறிஸ்டினா கதிர்வேலன், பகல் கனவு, பரிசு, காந்தா, கும்கி 2, சூதாட்டம், மிடில்கிளாஸ், தீயவர் குலைநடுங்க, மாஸ்க், ரிவால்வர் ரீட்டா உள்பட 32 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் இதுவும் தமிழ் சினிமாவில் சாதனை என்று கூறப்படுகிறது. இதுவரை ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் வெளியானதில்லை என்று திரைத்துறையினர் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

    இந்த 32 திரைப்படங்களில் மூன்று நான்கு படங்கள் மட்டுமே கவனிக்கப்பட்டன. ஜனவரியில் இருந்து நவம்பர் வரை வெளியான 262 திரைப்படங்களில் 28 படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்றுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 11 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக சாதனையை தன் வசப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் லாபுசாக்னே
    Next Article சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.