Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»BREAKING: இந்தியா அபார வெற்றி… ஒருநாள் போட்டித் தொடரை வென்றது
    விளையாட்டு

    BREAKING: இந்தியா அபார வெற்றி… ஒருநாள் போட்டித் தொடரை வென்றது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025Updated:December 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    odii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது.

    டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த  தெ.ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களை சேர்த்தது. தெ.ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டி ஹாக் 106, பவுமா 48 ரன்களை சேர்த்து அவுட் ஆகினர்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் 300 ரன்களை தாண்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 270-ல் கட்டுப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து 271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்களை சேர்த்திருந்தபோது அதிர்ச்சியளிக்கும் வகையில் அவுட் ஆனார்.

    இதையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலையான  ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    111 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் ஆகியவை அடங்கும். இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஜெய்ஸ்வால் விளாசும் முதலாவது சதமாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 9வது சதமாகும். டெஸ்டில் 7 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 1 சதம் ஏற்கெனவே விளாசியுள்ளார்.

    இதன்பின்னர் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இதனால் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்களை சேர்த்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், கோலி 65 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    Yashasvi Jaiswal brought up his maiden ODI century, India vs South Africa, 3rd ODI, Visakhapatnam, December 6, 2025

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇண்டிகோவுக்கு உத்தரவு!. ரத்தான விமான டிக்கெட் தொகையை, நாளை மாலைக்குள் பயணிகளுக்கு வழங்கவேண்டும்!. மத்திய அரசு அதிரடி!.
    Next Article 3 போட்டிகளில் 6 சதங்கள்… பேட்ஸ்மேன் ஆதிக்கம் நிறைந்த ஒருநாள் தொடர்
    Editor TN Talks

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.