Close Menu
    What's Hot

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடியை திருடினேன்!. முன்னாள் ஊழியரின் பரபரப்பு வீடியோ!
    இந்தியா

    திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடியை திருடினேன்!. முன்னாள் ஊழியரின் பரபரப்பு வீடியோ!

    Editor web3By Editor web3December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupathi undiyal scam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற உண்டியல் மோசடி விவகாரத்தில் தேவஸ்தான முன்னாள் ஊழியர் ஒருவர், தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் இடம் ‘பரகாமணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த துறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தவர் ரவிக்குமார். இவர் தேவஸ்தானத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். இவர் தனது பணிக்காலத்தில் சிறுக சிறுக உண்டியல் பணத்தை கையாடல் செய்து, சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடியதாக புகார்கள் எழுந்தன. பலத்த பாதுகாப்பு நிறைந்த கோவிலுக்குள் இவ்வளவு பெரிய தொகை எப்படி திருடப்பட்டிருக்கும் என்பது குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையின் பிடியில் சிக்கிய ரவிக்குமார், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்க பேசியுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். “திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில் 100 கோடி ரூபாயை நான் திருடியது உண்மை தான். செய்யக்கூடாத ஒரு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டேன். என் மனசாட்சி என்னை உறுத்தியதால், என் தவறை முழுமையாக உணர்ந்து கொண்டேன்,” என்று அந்த வீடியோவில் அவர் கதறி அழுதுள்ளார்.

    தனது பாவத்திற்கு பரிகாரமாக, திருடிய பணத்தில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் கோவிலுக்கே ஒப்படைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். “சுவாமிக்கு சேர வேண்டிய பணத்தை, அவருக்கே முழு மனதுடன் எழுதி பதிவு செய்து கொடுத்துவிட்டேன். நான் திருடிய பணத்தின் மூலம் சம்பாதித்த சொத்துக்களில் 90 சதவீதத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில், இனியும் என்னை துன்புறுத்த வேண்டாம்,” என்று அவர் அந்த வீடியோவில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    100 crore ravikumar tirupathi temple undiyal scam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருமணத்தை நிறுத்திய ஸ்மிருதி மந்தனா!. அவரே வெளியிட்ட பதிவு!. ரசிகர்கள் அதிர்ச்சி!.
    Next Article மலையாள இண்டஸ்ட்ரியல் அடி எடுத்து வைக்கும் நடிகர் சூர்யா !!!
    Editor web3
    • Website

    Related Posts

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026

    இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.