Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»“பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” – மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்
    இந்தியா

    “பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” – மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    prii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடலை பாஜக பயன்படுத்துகிறது என்று மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

    நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, அது குறித்த விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதையடுத்து, பல்வேறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

    விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, “இந்த விவாதத்தை நீங்கள் ஏன் கொண்டு வந்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு முதல் காரணம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தை நீங்கள் விரும்பவில்லை. இரண்டாவது காரணம், வர இருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்.

    உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகழ் வெளிச்சத்தை நீங்கள் பறிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை.

    பிரதமர் அழகாக உரைகளை நிகழ்த்துகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. வந்தே மாதரத்தை முதன்முறையாக ரவீந்திரநாத் தாகூர் ஒரு மாநாட்டில் பாடியதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்பதை அவர் கூற மறந்துவிட்டார்.

    வந்தே மாதரம் பாடலை பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நேதாஜிக்கு நேரு கடிதம் எழுதியதாக மோடி கூறினார். ஆனால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, இதுபற்றி கொல்கத்தா காங்கிரஸில் விவாதிக்குமாறு நேருவுக்கு நேதாஜி கடிதம் எழுதினார்.

    நேரு உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள். நீங்கள் அரசியலமைப்பு சபையைக் குறை கூறுகிறீர்கள். நேரு நாட்டுக்காக 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவர் இல்லாமல் இருந்திருந்தால் எந்த ஐஐடியும், ஐஐஎம்-மும் இருந்திருக்காது. நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கியவர் நேரு.

    விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவையே இன்றைய பிரச்சினை. அதுபற்றி நாம் பேசலாம். உண்மையான பிரச்சினைகளை புறக்கணிக்க உருவாக்கப்பட்ட திசை திருப்பும் தந்திரமே இந்த விவாதம்.

    நாங்கள் தோற்றாலும் நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேச நாங்கள் இங்கு மீண்டும் வருவோம். 1830-களில் இருந்து காங்கிரஸ் ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடலை பாடுகிறது. நீங்கள் எத்தனை முறை பாடியுள்ளீர்கள். தேசியப் பாடலைப் பற்றி விவாதம் செய்வது பாவம்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி மோசடி… கடை உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது
    Next Article போதைப்பொருள் வழக்கில் திருப்பம் – திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது
    Editor TN Talks

    Related Posts

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.