Close Menu
    What's Hot

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி மோசடி… கடை உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது
    தமிழ்நாடு

    ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி மோசடி… கடை உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arrr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆருத்ரா நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்​வ​தாகக் கூறி, ரூ.8.50 லட்​சம் பெற்று திரும்ப வழங்​காதவர் காரில் கடத்தி தாக்​கப்​பட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

    திரு​வள்​ளூர் மாவட்​டம், செவ்​வாப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் தர்​ம​ராஜ் (31). சென்னை திரு​மங்​கலம், அவ்வை தெரு​வில் வாஷிங் மெஷின் சர்​வீஸ் கடை நடத்தி வரு​கிறார். கடந்த 5-ம் தேதி மாலை, கடை அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

    அப்​போது அங்கு கார் ஒன்று வந்​தது. அதிலிருந்து இறங்​கிய 7 பேர் கும்​பல் தர்​ம​ராஜை தாக்கி காரில் கடத்​தி​யது. கோவளம் பகு​திக்கு கடத்​திச் சென்று அங்கு வைத்​தும் அவரை தாக்​கியது.

    மறு​நாள் (6-ம் தேதி) அவரை மீண்​டும் அந்த கும்​பல் திரு​மங்​கலம் அழைத்து வந்து கொண்​டிருந்த போது, சென்னை கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள அக்​கரை சிக்​னல் அருகே தர்​ம​ராஜ் காப்​பாற்​றும்​படி திடீரென கூச்​சலிட்​டார்.

    அவரது அலறல் சத்​தம் கேட்டு சோதனைச் சாவடி​யில் இருந்த போலீ​ஸார், மற்​றொரு காரில் பின் தொடர்ந்து விரட்டி சிறிது தூரத்​தில் மடக்​கினர். இதையடுத்து 2 பேர் பயந்து ஓட்​டம் பிடித்த நிலை​யில் 5 பேரும் பிடிபட்​டனர்.

    காரில் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த தர்​ம​ராஜ் மீட்​கப்​பட்​டார். அவர்​கள் அனை​வரும் நீலாங்​கரை போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். தர்​ம​ராஜ் கடத்​தப்​பட்ட இடம் திரு​மங்​கலம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகுதி என்​ப​தால், அந்த நிலைய போலீ​ஸாரிடம் அனை​வரும் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

    விசா​ரணை​யில் கடத்​தலில் ஈடு​பட்​டது பழைய பல்​லா​வரத்​தைச் சேர்ந்த ஸ்ரீஜி (30), ஜமீன் பல்​லா​வரத்​தைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (36), வேணுகோ​பால் (30), வானகரத்​தைச் சேர்ந்த யுவ​ராஜ் (36), மணப்​பாக்​கத்​தைச் சேர்ந்த ஆனந்த் (25) என்​பது தெரிந்​தது.

    இந்த 5 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து கடத்​தலுக்கு பயன்​படுத்​திய கார் மற்​றும் 5 செல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

    கடத்​தலில் ஈடு​பட்ட 7 பேரிடம் கடத்​தப்​பட்ட தர்​ம​ராஜ் ஆருத்ரா நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, பணம் பெற்​றுக் கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இப்​படி ரூ.8.50 லட்​சம் வரை பெற்​றுக்​கொண்​டு, அப்​பணத்தை திரும்ப வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது.

    இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்​தவர்​கள் பணத்தை திரும்​பக் கேட்​டு, தர்​ம​ராஜை கடத்தி தாக்​கி​யுள்​ளனர். ஆனால் இந்த குற்​றச்​சாட்டை தர்​ம​ராஜ் தொடர்ந்து மறுத்து வரு​கிறார். எனவே இந்த விவ​காரம் தொடர்​பாக தொடர்ந்து வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது என போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர் நன்கொடை
    Next Article “பாஜகவின் திசை திருப்பும் தந்திரமே ‘வந்தே மாதரம்’ விவாதம்” – மக்களவையில் பிரியங்கா காந்தி சாடல்
    Editor TN Talks

    Related Posts

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    June 13, 2026

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    June 13, 2026

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.