Close Menu
    What's Hot

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர் நன்கொடை
    தமிழ்நாடு

    கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர் நன்கொடை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cmd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொடி​நாளை ஒட்டி கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்​வர், துணை முதல்​வர் ஆகியோர் நன்​கொடை வழங்​கினர். இந்​தி​யா​வின் முப்​படை வீரர்​களின் அரும்​பணி​களை​யும், தியாகத்​தை​யும் போற்​றும் நாளாக ஆண்​டு​தோறும் டிச.7-ம் தேதி கொடிநாள் கடைபிடிக்​கப்​படு​கிறது.

    இந்​நிலை​யில் ஆளுநர் ஆர்​.என்​. ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஆகியோர் கொடிநாள் நிதிக்​காக சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே​விடம் நன்​கொடை வழங்கி வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

    ஆளுநர் ஆர்​.என்​.ரவி வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி: நம் தேசத்​தின் எல்​லைகளைப் பாது​காத்து நாட்​டின் இறை​யாண்​மையை உயர்த்​திப் பிடித்​து​வரும் நம் ராணுவ வீரர்​களுக்​கு, கொடிநாள் வணக்​கங்​களை நாம் சிரம் தாழ்த்தி நன்​றி​யுடன் தெரி​வித்​துக் கொள்​வோம். நமது தேசத்​தை​யும், மக்​களை​யும் பாது​காப்​புடன் வைத்​திருக்​கும் தன்​னலமற்ற சேவை, துணிவு, தியாகம் ஆகிய​வற்றை நினை​வூட்​டும் நாளே கொடி நாள் ஆகும்.

    நிபுணத்​து​வம், வீரம், கடமை​யில் அசைக்க முடி​யாத அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றுக்கு இந்​திய ராணுவம் புகழ் பெற்​றது. ராணுவத்​தினரின் கொடிநாள் நிதிக்கு நிதி அளிப்​ப​தன் மூலம் படைவீரர்​களின் கண்​ணி​யத்​துக்​கும் நலனுக்​கும் நாம் துணை நிற்​பதுடன், அனுபவம் மிக்க நம் முன்​னாள் படை வீரர்​களுக்​கும் போரி​னால் கணவரை இழந்​திருப்​பவர்​களுக்​கும் நம்​மால் உதவ முடி​யும். கொடிநாள் நிதியை முழு​மனதுடன் தாராள​மாக வழங்​கு​மாறு தமிழ்​நாட்டு மக்​களை நான் வேண்டி விரும்​பிக் கேட்​டுக்​கொள்​கிறேன்.

    <div class="paragraphs"><p>கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி, கிண்டி லோக் பவனில் கொடி நாள் நிதிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார்.</p></div>

    முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தாயகம் காக்க தன்​னலம் மறந்து பணி​யாற்​றும் முப்​படை வீரர்​களுக்​கும், அவர்​தம் குடும்​பத்​தினருக்​கும் ஆயுதப்​படை கொடி​நாளில் நாட்டு மக்​களின் சார்​பில் எனது வணக்​கங்​கள்.

    மக்​கள் அச்​சமின்​றிப் பாது​காப்​பாக வாழ, உயிரைத் துச்​ச​மாக எண்​ணி, கடுமை​யான சூழல்​களில் கண்​ணுறங்​காமல் காவல் காக்​கும் படைவீரர்​களின் பணி ஈடு இணை​யற்​றது. தியாகத் தீரர்​களின் மறு​வாழ்​வுக்​கும் அவர்​களின் குடும்ப நலனுக்​காக​வும் கொடிநாள் நிதி​யளிப்​பது குடிமக்​களான நம் அனை​வரின் கடமை.

    துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: முப்​படை வீரர்​களின் வீரத்​தைப் போற்​றும் வகை​யிலும், போரில் தியாகம் புரிந்த வீரர்​களுக்​கும் அவர்​களது குடும்​பத்​துக்​கும் உதவும் வகை​யிலும், கொடி நாள் நிதிக்​கான நன்​கொடை அளித்​தோம்.

    நாட்​டுக்​குள் நாம் நல்​வாழ்வு வாழ, தங்​கள் உயிரை​யும் துச்​சமெனக் கருதி எல்​லை​யைப் பாது​காக்​கும் படை வீரர்​கள் நன்​றிக்​குரிய​வர்​கள். பரந்த மனப்​பான்​மை​யுடன் கொடி நாள் நிதி அளிப்​போம். படை வீரர்​களுக்​கும், அவர்​கள் குடும்​பத்​தினருக்​கும் என்​றும் துணை நிற்​போம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘லிட்டில் மாஸ்டர்’ சச்சினை விட இங்கிலாந்து வீரர்கள் என்ன பெரிய… – முன்னாள் வீரர்கள் கடும் சாடல்
    Next Article ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி மோசடி… கடை உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது
    Editor TN Talks

    Related Posts

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    July 18, 2026

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    July 18, 2026

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.