Close Menu
    What's Hot

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!
    Featured

    அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!

    editor5By editor5July 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் புகுந்ததாக குற்றச்சாட்டுகளை எழுப்பி மனு தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விழுப்புரம் மாவட்ட மகளிர் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசவுந்தரி, கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    தவெக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின்பேரில், மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பதவிக்கும் ஞானசவுந்தரி விண்ணப்பித்திருந்தார். தமிழக அரசு ஜூன் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அன்று மாலை ஒரு நியமனப் பட்டியல் வாட்ஸ்அப்பில் வெளியானது. இதனை உறுதிப்படுத்த மாவட்ட செயலாளரிடம் விசாரித்தபோது, அது இறுதிப் பட்டியல் என அவர் தெரிவித்ததாக ஞானசவுந்தரி கூறினார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அவர், அரசு வழக்கறிஞர் நியமனங்களில் 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், பிற கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் லஞ்சத்தின் உதவியுடன் நியமிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

    அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெறுவதாகவும், இதற்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்க வேண்டும் எனவும், நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயர்களை மனுவில் இருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஞானசவுந்தரியை தவெகவில் இருந்து நீக்கியுள்ளது கட்சி.

    விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இணையம் வழியாக உறுப்பினரான (MS.No.4063/2015) சந்திரமோகன் மனைவி ஞானசவுந்தரி, கட்சியின் எதிரிகளுடன் சேர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குகிறோம். கட்சியின் எந்த நிர்வாகியோ உறுப்பினரோ இனி அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தவெகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

     

     

    gnanasoundari TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!
    Next Article மோசமாகும் உடல்நிலை..!! உண்ணாவிரதம் இருந்த வாங்சுக் வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலில் அட்மிட்..!!
    editor5

    Related Posts

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    July 18, 2026

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    July 18, 2026

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.