Close Menu
    What's Hot

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!
    Featured

    பழனி கோயில் நில மோசடி விவகாரம்: சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 18 10h35m01s866
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    பழனி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும்நிலையில், அதனை வெறும் ரூ.2 கோடிக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் ரவுண்ட்ரோடு லிங்கா அவன்யூ பகுதியில் வசித்து வரும் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் இருந்த ஜஸ்டின் மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்தச் சோதனையின் போது, நில மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இக்கோயில் நில மோசடி வழக்கில் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!
    Next Article அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு.. கட்சியிலிருந்து ஞானசவுந்தரி நீக்கம்..!! தவெக அதிரடி..!!
    Editor web1
    • Website

    Related Posts

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    July 18, 2026

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    July 18, 2026

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.