உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர்.
இந்திய பெண்கள் அணி :
கோல் கீப்பர்கள் :
1. சவிதா
2. பிச்சுதேவி கரிபாம்
பின்களம் :
1. இஷிகா
2. சுஷிலா சானு
3. லால்தன்ட்லுவாங்கி
4. ஜோதி
5. ஷில்பி தபாஸ்
நடுகளம் :
1. நிக்கி பிரதான்
2. சாஷி ராணா
3. சுனேலிதா டாப்போ
4. சலிமா ( கேப்டன் )
5. நேகா
6. தீபிகா
முன்களம் :
1. லால்ரெம்சியாமி
2. ருதுஜா
3. நவ்னீத் கவுர்
4. தீபிகா
5. இஷிகா
6. பல்ஜீத்
7. பியூட்டி டங்டங்
