Close Menu
    What's Hot

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!
    Featured

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    Editor web1By Editor web1July 18, 2026Updated:July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 18 at 8.11.59 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மதுக்கரை பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஆயுதங்களால் மிரட்டி கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    கோவை, மதுக்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேர் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 15-ம் தேதி இரவு, அவர்கள் வீட்டின் முன்புறம் அமர்ந்து கைப்பேசியில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்று மிரட்டியுள்ளது.

    வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல், மேலும் 4 பேரை வரவழைத்து ஊழியர்களைக் கடுமையாக மிரட்டியது. அப்போது, தாக்குதல் நடத்தி ஊழியர் ஒருவரின் தலையில் தோசைக்கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த 4 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.

    பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், மதுக்கரை அருகே பதுங்கியிருந்த 8 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை கணுவாய் மலைப்பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்- வனத்துறைக்கு கோரிக்கை!
    Next Article உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!
    Editor web1
    • Website

    Related Posts

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    July 18, 2026

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    July 18, 2026

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    பழனி கோவில் நில சர்ச்சை: சேதுபதி வீட்டில் இறங்கிய சிபிசிஐடி.. தலைமறைவானவருக்கு வலை..!!

    ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!

    கோவை நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர தம்பதி: புதுவித மோசடி எப்படி நடந்தது?- 2 பேரும் கைது!

    திருப்பூரில் கோர விபத்து: நின்றிருந்த கேஸ் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி- 5 பேர் படுகாயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.