Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»‘லிட்டில் மாஸ்டர்’ சச்சினை விட இங்கிலாந்து வீரர்கள் என்ன பெரிய… – முன்னாள் வீரர்கள் கடும் சாடல்
    விளையாட்டு

    ‘லிட்டில் மாஸ்டர்’ சச்சினை விட இங்கிலாந்து வீரர்கள் என்ன பெரிய… – முன்னாள் வீரர்கள் கடும் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sachin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென் ஆப்பிரிக்கா சோக்கர்ஸ் என்ற அடையாளத்திலிருந்து மீண்டு வர கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகாலம் பிடித்தது, ஆனால் ‘poor travelers’ என்னும் இங்கிலாந்தின் அயல்நாட்டு கிரிக்கெட் தொடர் தோல்விகளுக்கான அடையாளம் இனி ஒரு போதும் நீங்காது நிலைக்கும் போல் தெரிகிறது.

    பிரிஸ்பன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷம் என்றால் என்னவென்று தெரியாமல் முட்டாள்தனமாக பேட்டிங் செய்ததோடு, காலங்காலமாக ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மென்களுக்கு எதிராக என்ன செய்யக் கூடாது என்று கூறப்பட்டு வருகிறதோ, அதையும் மீறி ஷார்ட் பிட்ச் மற்றும் வைடு ஷார்ட் பிட்ச் பந்துகள், இல்லையெனில் ட்ரைவ் ஆடும் லெந்த்தில் ஃபுல் ஆக வீசுவது என்று தவறின் மேல் தவறிழைத்து 2-0 என்று ஆஷசில் மீளாத்துயருக்குச் சென்றுள்ளது.

    சச்சின் ஒரு முறை ஆஸ்திரேலியாவில் லஷ்மண், திராவிட், சேவாக் என்று அனைவரும் பிரமாதமாக ஆட இவர் மட்டும் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தபடியே மலிவாக தன் விக்கெட்டைப் பறிகொடுத்து வந்தார். ஆனால் சிட்னியில் கவர் டிரைவ் ஆடப்போவதில்லை என்று திட்டவட்ட மன உறுதியுடன் ஆடி 241 ரன்கள் எடுத்தார். அந்த உறுதியையும் திண்ணத்தையும் சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ‘இப்போது பாஸ்பால் என்று தற்புகழ்ச்சிப் பாடி வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் என்ன லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை விடவும் பெரிய வீரர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாஸ்பால் அணுகுமுறையை விடுத்து நேற்று பென் ஸ்டோக்ஸும் வில் ஜாக்ஸும் பொறுமையாக ஆடி 3 மணி நேரம் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நெருக்கிய போது உண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து வரும் என்று தெரியாமல்தான் இருந்தது. இது நல்ல அணுகுமுறையா அல்லது திட்டமில்லாமல் சும்மா 4பவுண்டரிகளை அடித்து விட்டு விக்கெட்டைத்தூக்கி எறிவதை ஆக்ரோஷம் என்று வர்ணித்து வீணாகப் போவதா என்று இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாகச் சாடியுள்ளன.

    இங்கிலாந்தின் ஆக்ரோஷ முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டியைப்பார்க்க நான் செலவழித்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த இங்கிலாந்து வீரர்கள் தகுதியுடையவர்களும் அல்லர், வலுவானவர்களும் அல்லர்’ என்றார்.

    முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜானதன் ஆக்னியு, தனது பிபிசி பத்தியில், “பாஸ்பால் அணுகுமுறை நீட்டிக்கப் பட முடியாதது. இதன் முதல் ஆண்டில் சில உடைந்த வீரர்களை வைத்துக் கொண்டு சிற்சில போட்டிகளை வென்றது இங்கிலாந்து, பரபரப்பாக ஆடி ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. ஆனால் இனி அது ஒரு போதும் செல்லாது.

    ஒற்றப் பரிமாணத்தில் கிரிக்கெட்டை ஆட முடியாது. பாஸ்பால் இறந்து விட்டது, ஆகவே வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் கவர் ட்ரைவ் ஆடுவதை முற்றிலும் தவிர்த்து இரட்டைச் சதம் அடித்தார், இப்போது உள்ள இந்த இங்கிலாந்து வீரர்கள் என்ன சச்சின் டெண்டுல்கரை விடவும் பெரிய வீரர்களாகி விட்டனரா என்ன?

    செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து முடிவுகள் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் பைத்தியக்காரத்தனத்தை மாற்றவில்லை எனில் இந்த பாஸ்பால் அணுகுமுறைக்கு சமாதி கட்ட வேண்டியதுதான்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய வீராங்​கனை பிரதிகாவுக்கு டெல்லி அரசு ரூ.1.5 கோடி பரிசு
    Next Article கொடிநாள் நிதிக்கு ஆளுநர், முதல்வர் நன்கொடை
    Editor TN Talks

    Related Posts

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.