Close Menu
    What's Hot

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»வென்று காட்டுவோம் ,வாகை சூடுவோம் : விஜய் நம்பிக்கை
    அரசியல்

    வென்று காட்டுவோம் ,வாகை சூடுவோம் : விஜய் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரச்சார முன்னெடுப்புகளை திமுக அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்குப் பின் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.

    நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.

    அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வருக்கும், உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.

    அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரச்சார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் திமுக அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வென்று காட்டுவோம், வாகை சூடுவோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மாதம் ஒரு வதந்தி பரப்புகிறார்கள்” – மீனாட்சி சவுத்ரி வருத்தம்
    Next Article அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு இறக்குமதி வரி விதிக்க ட்ரம்ப் பரிசீலனை!
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.